MOTTO

Education,Discipline,Purity

ESTABLISHED IN 1978

உவர்மலை விவேகானந்தா கல்லூரி

VISION




Competent citizens who cope with the erudite world.

MISSION

To create knowledgeable, skillful, disciplined and honest students by providing ameliorated learning opportunities through an analysis of the experiences of the past and present and the challenges of the future.

Sunday 27 February 2011

Monday 7 February 2011

முப்பத்து மூன்றாவது அகவையில் உவர்மலை விவேகானந்தா..........

முப்பத்து மூன்றாவது அகவையில் தடம் பதிக்கும் எமது கல்லூரி கடந்து வந்த பாதையின் பதிவுகளை மீட்டிப்பார்க்கும் ஓர் ஞாபக மீழுகை 

எமது கல்லூரியான உவர்மலை விவேகானந்தா கல்லூரியை பற்றி கூறும்போது முக்கிய இரு விடயங்கள் பற்றி குறிப்பிட வேண்டும். எமது பாடசாலையின் இருமருங்கிலும் உயர்ந்து நிற்கின்ற கோணமலையின் உச்சியிலும் உவர்மலையின் உச்சியிலும் வீற்றிருக்கும் கோணேசப்பெருமானதும் கண்ணகி அம்பாளதும் அருட்பார்வையின் பயனாக எமது பாடசாலை குறுகிய காலத்தில் துரித வளர்சிசி கண்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 

இன்று உவர்மலை விவேகானந்தா கல்லூரி என்று எல்லோராலும் அழைக்கப்படும் எமது கல்லூரியானது 1978 ம் ஆண்டு மாசித்திங்கள் பத்தாம் நாள் அன்றைய தேசியப்பேரவை உறுப்பினராகிய கௌரவ இரா சம்பந்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அப்போது எமது பாடசாலையின் பெயர் உவர்மலை தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.வி. தங்கவேல் அவர்கள் பணியாற்றினார் அப்போது 150 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் பாடசாலை இயங்கிவந்தது

அக்கால கட்டத்தில் உவர்மலையை சேர்ந்த நலன்விரும்பிகள் சிலரின் முயற்சியால் வீடு வீடாகச் சென்று சிறிது சிறிதாக சேகரித்த பணத்தில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 எமது கல்லூரியின் சில வரலாற்றுச் சுவடுகள்


1.முதன் முதலாக எமது பாடசாலைக்காக 60-20  அடி மண்டபம் ஒன்று கட்டப்பட்டது.(இதில் வேலுப்பிள்ளை ஐயாவின் பங்கும் முக்கியமானது.)

2.கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் 16.06.1979 ம் திகதி சனிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

3. 1981(பங்குனி) - முதலாவது மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது 


4. 1982-சாரணியம் ஆரம்பிக்கப்பட்டது


5.  1984- அதிபர் திரு.வ.தங்கவேல் - இடமாற்றம்

6.  1984- திரு.கு.பாலசந்திர ஐயர் 2வது அதிபராக பதவியேற்பு


7. 1990- திரு.கு.பாலசந்திர ஐயர் - இடமாற்றம்


8. 1990- திரு.எம்.மகாதேவன் 3வது அதிபராக பதவியேற்பு



9 . 1992- திரு.எம்.மகாதேவன் - இடமாற்றம்


10. 1992- திரு.எஸ். நவரெட்ணம் 4 வது அதிபராக பதவியேற்பு


11  1994-95 நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ.அ.தங்கத்துரையின் முயற்சியினால் நவோதயா-எஸ்.டி.எஸ் திட்டங்களுக்குள் பாடசாலை இணைத்துக்கொள்ளப்பட்டது.

12. 1998- கல்லூரியின் இருபதாவது ஆண்டு விழா


13.
பழைய மாணவர் சங்க செயலாளராக எஸ்.சாயிசிறீதர் தெரிவு

ஜனாதிபதியின் கெரவ செயலாளர் சுசீலா மெண்டிஸ் கல்லூரிக்கு விஜயம்
பிரமாண்டமான கலையரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழா- வட கிழக்கு மாகாண ஆளுநர் பிரதம அதிதி


14. 2002 - கல்லூரிதினத்ததை முன்னிட்டு மரதன் ஓட்டம்


15. 2002 - மார்ச் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2002 கலை வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான பூகோளமயமாதல் கருத்தரங்கு-  சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகளும் பங்கேற்பு

16. 2003 - கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டம்


17. 2004 - சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் கல்லூரியில் தஞசம்- ஜனாதிபதி சந்திரிகா கல்லூரிக்கு விஜயம்


2004- சிவராஜா கோகிலன்மற்றும் அமிர்தநாதன் பிரசாந்தன் ஆகியோர் தேசிய ரீதியில் (உயர்தர பரீட்சையில்) சாதனை - ஜனாதிபதி சந்திரிகா வாழ்த்து- ஜனாதிபதியின் செயலாளர் அதிபர் நவரெட்ணத்துக்கு கடிதம் மூலம் பாராட்டு

The President further congratulates the two students, namely Mas. Sivarajah Kokilan, Commerce Stream, 2nd Rank, National Level and Mas. Amirthanathan Prashanthan, Mathematics Stream, Super Merit who obtained very good results and all others who brought fame to the school through studies and extra-curricular activities."


18. 2005- இத்தாலிய நாட்டு தூதுவர் கல்லூரிக்கு விஜயம்.

19. 2007- ஜப்பானிய பிரதிநிதிகளின் விஜயம்

20. 2008- 2008- கல்லூரியின் 30 வது ஆண்டு நிறைவு விழா- மாகாண கல்வி அமைச்சு செயலாளர் கௌரவ தியாகலிங்கம் பிரதம அதிதி



2008-ஜீன் - 3ம் வாரம் - பிரதி அதிபராக திரு.காளிராஜா  நியமனம் - கல்லூரியில் அமைதியின்மை


4ம் வாரம் -  கல்லூரியில் அமைதிநிலை



ஜீலை- 01  - அதிபர் திரு.நவரெட்ணத்தின் பணி ஓய்வு தினம்


திரு.விஜேந்திரன் தற்காலிக அதிபராக நியமனம்(பிரதி வலய கல்வி பணிப்பாளர்)

பழைய மாணவர் சங்க கூட்டம்- திரு .கஜேந்திரன் செயலாளராக தெரிவு 




21. 2009-திரு.ஆ.செல்வநாயகம் அதிபராக பதவியேற்பு 
பழைய மாணவர் சங்க கூட்டம்- திரு .நா.சதீஸ்கண்ணா செயலாளராக தெரிவு 


22. 2010- 1978-2010 வரை கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர்தினத்தில் கௌரவம்- (பழையமாணவர்களால் ஆசிரியர்களுக்கு கௌரவம்)


23. 2010- 2010- ஒக்டோபர் ஆண்கள் விடுதி திறப்பு விழா - மாகாண முதலமைச்சர் பிரதம அதிதி


24.இலவச பாடநூல் வழங்கும் தேசிய வைபவம் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்தன தலமையில் இடம் பெற்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் சிறப்ப அதிதி.


நாம் தேடிப் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்ட்து. எனினும் கல்லூரி வரலாற்றினை தொகுத்து நூலாக வெளியிடுவற்கான முயற்சி கைகூட இறைவன் அருள்புரிவாராக.




தில்லைநாதன் பவித்ரன்
நடராசா உமாசங்கர்
பழைய மாணவர்கள்








    Download As PDF