MOTTO

Education,Discipline,Purity

ESTABLISHED IN 1978

உவர்மலை விவேகானந்தா கல்லூரி

VISION




Competent citizens who cope with the erudite world.

MISSION

To create knowledgeable, skillful, disciplined and honest students by providing ameliorated learning opportunities through an analysis of the experiences of the past and present and the challenges of the future.

Thursday 22 April 2010

உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்

உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்

1978ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முதலாவது அதிபராக திரு.வி.தங்கவேல் அவர்களும்இரண்டாவது அதிபராக திரு.பாலச்சந்திர ஐயர் அவர்களும்மூன்றாவது அதிபராக திரு.மகாதேவன் அவர்களும் கடமையாற்றினார்.அதன் பின்னர் கௌரவ.எஸ் நவரெட்ணம் அவர்கள்நான்காவது அதிபராக நியமிக்கப்பட்டார்

சுமார் பதினாறு ஆண்டுகளாக அதிபராக கடமையாற்றிய திரு.எஸ்.நவரெட்ணம் அவர்கள் 2008 ம் ஆண்டு ஜீன் மாதம் தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.இவருடைய காலத்தில் இக்கல்லூரி பெரும் வளர்ச்சி கண்டது.

உயர்தர வர்த்தக கணித விஞ்ஞான பிரிவுகளை கல்லூரியில் ஆரம்பிப்பதில் வெற்றி கண்ட இவர் இப்பிரிவுகளில் கல்வி கற்ற மாணவர்களின் பெறுபேறுகளை உயர்த்துவதிலும் வெற்றி கண்டார்

தற்போது கல்லூரியில் காணப்படும் அனைத்து வளங்களும் இவரின் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது .பிரம்மாண்டமான கலையரங்கம் நூலகம் பல்லூடகப் பிரிவு விஞ்ஞான ஆய்வு கூடம் கணினிப்பிரிவு பாண்ட் இன்னியக்குழு என்பனவும் இவரின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது

5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் வருடா வருடம் 50-65 வரையானவர்கள் சித்தி பெற்றதும் இவரின் முயற்சியினாலேயே ஆகும்

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் பலர் 10"ஏ" 9"ஏ" 8"ஏ" தரங்களைப் பெற்றதும் இவரின் முயற்சியினாலேயே ஆகும்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் பலர் மருத்துவ பொறியியல் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டனர்

16.08.2004 ல் கல்லூரி அதிபருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிய சனாதிபதி அதி மேன்மை தங்கிய சந்திரிக்கா குமாரதுங்கவின் உதவிச்செயலாளர் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டினார் http://www.dailynews.lk/2004/08/19/new17.html

கல்லூரியின் புகழினை பாரெங்கும் பரவச்செய்த இவரின் சேவைக்காலம் "உவர்மலை விவேகானந்தாவின் பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது.


HON.S.NAVARETNAM





Download As PDF

1 comment:

Unknown said...

im really proud about our hons principal..........